மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

0
COLOMBO, SRI LANKA - FEBRUARY 19, 2014: Sri Lankan Airplane parked on apron in front of air traffic control tower at Bandaranaike International Airport. It is hub of Sri Lankan Airlines, the national carrier of Sri Lanka.

மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணத்தை வங்கிகள் மூலம் நாட்டிற்கு கொண்டு வருவதை தடுக்க ஒரு மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கில் வேலை செய்யும் தொழிலாளர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை சமீப நாட்களாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய மோசடிகள் இலங்கை வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயத்தின் வரவைக் கட்டுப்படுத்துகின்றதென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களைக் குறைக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணத்தை வங்கிகள் மூலம் நாட்டுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, கடத்தல்காரர்கள் அவர்களிடம் உள்ள பணத்தை விட மதிப்பு மிக்க தங்க பிஸ்கட்டுகளை கொடுத்து இலங்கைக்கு கொண்டு வந்த பின்னர் அதனை பெற்றுக் கொள்வதாக கூறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வட்டாரங்களுக்கமைய, கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு நாளும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் தொழிலாளர்களின் வசம் தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கடந்த வாரத்தில் மாத்திரம், விமான நிலைய சுங்க அதிகாரிகள் 100 கிராம் நிறையுடைய 6 தங்க பிஸ்கட், 50 கிராம் தங்க 3 பிஸ்கட் மற்றும் 40 மற்றும் 30 கிராம் நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக இந்த கடத்தல்காரர்கள் அதிக மதிப்புள்ள தங்க நகைகளை தயாரித்து தொழிலாளர்களுக்கு அணிவித்து இலங்கைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தல்காரர்களை நம்பி அவ்வாறான மோசடிகளுக்கு உதவ வேண்டாம் என இலங்கைய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மோசடியில் சிக்கினால் பணியாளர்களும் கைது செய்யப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here