மத்தியதரை கடலில் மூழ்கிய சொகுசு படகு…

0

இத்தாலி அருகே மத்தியதரை கடலில் சொகுசு படகு மூழ்க ஆரம்பித்துள்ளது.

குறித்த சொகுசு படகில் சிக்கிக்கொண்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கரையிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த அந்த 130 அடி நீள சொகுசு படகு மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கியுள்ளது.

அந்த படகில் இருந்து அனுப்பப்பட்ட அபாய சிக்னலை கவனித்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்தனர்.

படகில் இருந்த 4 பயணிகள் மற்றும் 5 மாலுமிகளை மீட்க்கப்பட்டனர்.

சொகுசு படகு வேகமாக மூழ்கியதால் அதனை இழுவை படகு மூலம் கரைக்கு இழுத்துவரும் முயற்சி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here