மது போதையில் இருந்த கணவரால் மனைவி, மகள்களுக்கு நேர்ந்த நிலை..!பதறவைக்கும் சம்பவம்

0

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் 42 வயது இவர் சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் மது போதையில் இருந்தார்.

இதன்பின்னர் இரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி வீனா குமாரி மற்றும் மகள் தியா 16 வயது ஷன்வி குமாரி (8) ஆகியோரை சுத்தியலால் அடித்தும் கழுத்தை நெரித்தும் தீபக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து மூன்று சடலங்களுடன் இரவு முழுவதும் இருந்திருக்கிறார்.

அடுத்தநாள் காலை 11 மணிக்கு 22 வயதான ஆசிரியை ரிங்கி வழக்கம் போல இரண்டு சிறுமிகளுக்கு படிப்பு சொல்லி தர தீபக் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போதும் ஆத்திரத்தில் இருந்த தீபக் ரிங்கியையும் கொலை செய்தார்.

நான்கு பேரின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் தனது நண்பர் ரோஷனுக்கு போன் செய்து வீட்டுக்கு சாப்பிட வர சொல்லியிருக்கிறார் தீபக்.

ரோஷன் தனது மனைவி, மச்சான் மற்றும் குழந்தையுடன் வந்த நிலையில் அனைவரையும் கொடூரமாக தாக்கிவிட்டு தீபக் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் நான்கு சடலங்களையும் கைப்பற்றியதோடு காயமடைந்த மற்ற நால்வரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

எதற்காக தீபக் இந்த கொடூர செயல்களை செய்தார் என விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இதனிடையில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரிங்கி அரை நிர்வாணமாக காணப்பட்டதால் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here