மதுபானசாலைகள் திறக்கப்படுவதாக வெளியான போலி தகவல்களால் ஏற்பட்ட குழப்பம்!

0

மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது.

இன்று (17) முதல் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், இது தொடர்பில் மதுவரித் திணைக்கள ஆணையாளரிடம் வினவிய போது, மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் பியர் போத்தல்கள் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என்பதுடன் அவ்வாறு எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, மதுபானசாலை திறக்க அனுமதி வழங்கப்பட்டதாக போலியான தகவல்கள் வெளியானதையடுத்து ஹட்டன், நுவரெலியா உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பலரும் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்ததை காணமுடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here