மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்ட மாணவிக்கு நேர்ந்த கதி….

0

இந்தியாவில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், வடுகர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா 17 வயது.

லாவண்யா திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியின் விடுதியில் தங்கி 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், பூச்சிமருந்தை குடித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் உயிரிழந்தார்.

பள்ளியில் மதமாற்றத்திற்கு மாணவியை கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார் என பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த தற்கொலை குறித்து விசாரித்த தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையை வெளியிட்டது.

அதில் அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் மதமாற்ற புகார் குறித்த எந்த ஆதாரமும் இல்லை.

மாணவியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரருக்கு மனநலம் குறித்த மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும்.

உரிய பதிவின்றி செயல்பட்ட பள்ளி விடுதியின் மீது நடவடிக்கை எடுத்து மாணவர்களை வேறு விடுதிகளுக்கு மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here