மணிவண்ணனுக்கு கொரோனா உறுதியானது! சுமந்திரன் உட்பட சிலர் தனிமைப்படுத்தல்

0

யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்குகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் உட்பட்ட பெருமளவானவர்களும் இதனால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நெல்லியடியில் திருமண நிகழ்வில் பங்குகொண்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மணிவண்ணனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய ஒருவர் கலந்துகொண்ட திருமண வைபவம் ஒன்றில் கடந்த 20ஆம் திகதி நெல்லியடியில் கலந்துகொண்டமையால் நான் என்னை உடனடியாக சுயதனிமைபடுத்திக்கொண்டதோடு பி.சி.ஆர். பரிசோதனையும் செய்துகொண்டேன். இதன்போது எனக்கு கொரோனாத் தொற்று உறுதியானது.

என்னோடு இக்காலப் பகுதியில் தொடர்புகொண்ட நபர்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுகொள்கின்றேன்.

இன்று மாலை நடைபெறவிருந்த யாழ். மாநகர சபையின் விசேட கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றேன்” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here