மணிரத்னத்தின் விமர்சனத்தால் கடுப்பான கே வி ஆனந்த்!

0

நவரசாவில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ள கே வி ஆனந்த் தயாரிப்பாளர் மணிரத்னத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.

இந்நிலையில் அந்த படத்தில் இருந்து ஏற்கனவே இயக்குனர் ஹலிதா ஷமீம் மற்றும் பொன்ராம் ஆகியவர்கள் விலகினர். இந்நிலையில் இப்போது இயக்குனர் கே வி ஆனந்தும் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கேவி ஆனந்த் விலகலுக்கும் அவருக்கும் தயாரிப்பாளர் மணிரத்னத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.

கே வி ஆனந்த் எடுத்த காட்சிகளை பார்த்த மணிரத்னம் மிகவும் மோசமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கோபமாக கூறவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளைக் கூட கவனிக்காமல் கே வி ஆனந்த் விலகிவிட்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here