மட்டக்களப்பில் 28 வயது ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சித்த அதிபர்

0

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த அதிபரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.

இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here