மட்டக்களப்பில் முதல் முதலாக கொரோனாவுக்கு பலியான 10 வயதுச் சிறுவன்!

0

மட்டக்களப்பில் கொரோனா தொற்றால் முதல் முதலாக 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், 43 பேருக்கு டெல்ட்டா வேரியன் வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளது.

இதில் வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்ட்டா வேரியன் வைரஸ் இருக்க கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here