மட்டக்களப்பில் பதுக்கி வைக்கப்பட்ட பால்மாவை வினியோகம் செய்யும் வர்த்தகர்கள்…

0

இலங்கையில் வாழைச்சேனை பிரதான வீதியில் சில மாதகாலமாக அங்கர் பால்மா வர்த்தகர்களால் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அங்கர் பால்மா பக்கெட் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் வியாபார நிலையங்களில் காத்திருந்து பால் மா பக்கெட் இல்லாமல் வீடு திரும்பிச் செல்கின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் முதலாளி வர்க்கத்தினர் அங்கர் பால்மா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துக்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

குறித்த வியாபாரிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை மக்களுக்குச் செய்யும் ஒரு துரோகம் என தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here