மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் மரணம்

0

மட்டக்களப்பு இருதயபுரத்தில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

புதன்கிழமை இரவு கைதுசெய்யப்பட்ட இளைஞன் திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையி;ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தமைக்காக கைதுசெய்யப்பட்ட சந்திரன் விதுசன் மட்டக்களப்பு பொலிஸ்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை தீடிரென உடல்நிலை பாதிக்கப்பட்டார் இதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இளைஞனின் குடும்பத்தவர்கள் மரணம் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here