மட்டக்களப்பில் கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி பலி…!

0

தேற்றாத்தீவு கிராமத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது சிறுமி நேற்று தனது வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த போது வளவில் அமைந்திருந்துள்ள கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளது.

குறித்த சிறுமியின் தந்தை கிணற்றிலிருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சி குடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here