மட்டக்களப்பில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட பெண் பலி

0

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணெருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அதிகாலை மரணமான தேவகியின் வீட்டுக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் முன்னைய பகையை வைத்துக்கொண்டு பிரச்சினையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு சாராரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், தேவகி என்பவர் இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கப்பட்டு, செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது மரணமானார்.

இச்சமபவத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here