மங்கோலியாவை தாக்கிய புழுதிப் புயல்! 80 க்கும் மேற்பட்டோர் மாயம்…. 6 பேர் பலி

0

மங்கோலியாவில் கடுமையான புழுதிப் புயல் தாக்கியுள்ளது.

இந்நிலையில் புழுதிப் புயலில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 80 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

குறித்த புழுதிப்புயலில் சிக்கி மொத்தம் 548 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் 467 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மீதமுள்ள 81 பேரை மீட்க்கும் நடவடிக்கை தெடர்ந்து நடந்து வருகிறது.

முன்னதாக திங்களன்று, மங்கோலியாவில் தோன்றிய புழுதி புயல் சீனாவின் தலைநகரைத் தாக்கியதால் பீஜிங்கில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக நகரத்தில் பாரிய போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here