மங்கள சமரவீரவின் மரணத்திற்கான காரணம் வெளியானது..

0

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென உயிரிழந்திருந்தார்.

இவருடைய மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.மங்கள சமரவீர கொரோனாவுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அவர் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இவ்வாறு கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த மங்கள சமரவீரவுக்கு, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மங்கள சமரவீர நீண்ட காலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டிருந்த நிலையில், அதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here