மக்களின் இயல்பு வாழ்க்கையை அச்சுறுத்தும் தொற்று… நிபுணர்கள் அச்சம்
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இளையோர்கள், மருத்துவ ரீதியாக முன்னர் ஆரோக்கியமாக இருந்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பக்கவிளைவுகளுக்கு உள்ளாகபடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஓமிக்ரான் தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு இந்த நிலை ஏற்படும் என Dr Leonard Jason சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் பொருளாதார மற்றும் சுகாதார அமைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உலகின் எந்த நாட்டிலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 10ல் இருந்து 30% மக்கள் நீண்ட காலம் அதன் பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லேசான பாதிப்பு என கூறப்படும் வாசனை உணர்வை இழப்பது.
அவ்வப்போது ஏற்படும் தலைவலி உள்ளிட்டவையால் அன்றாட வாழ்க்கை தலைகீழாக மாறும் நிலை கூட ஏற்படலாம்.
மேலும், மிகுந்த சோர்வு, அடிக்கடி ஏற்படும் உடல் வலிகள் அல்லது உணர்வு சார்ந்த பிரச்சனைகளைலால் பாதிக்கப்படலாம்.
பலர் தம்மை கவனித்துக்கொள்ள ஒருவரை ஏற்பாடு செய்யும் நிலைக்கே தள்ளப்படலாம்.
இதனால் சமூகத்தில் இருந்து விலகியிருக்கும் சூழலும் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்த நீண்ட கால கொரோனா பக்கவிளைவுகள் என்பது சிலருக்கு குணமடைந்த சில வாரங்களில் உருவாரும் சிலருக்கு சில மாதங்களுக்கு பின்னர் உருவாகும் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 40% மக்கள் ஒருகட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார்கள்.
அதில் 10% மக்களுக்கு நீண்ட கால பக்கவிளைவுகள் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.