மக்களின் இன்றைய நடவடிக்கை! மகிழ்ச்சியடைவதாக இல்லை. இராணுவத்தளபதி

0

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், இன்று (25) மக்கள் நடந்து கொள்ளும் விதம் மகிழ்ச்சியடைவதாக இல்லை.

இதனால் எதிர்காலத்தில் பயணத்தடைகள் நீக்கப்படும் சந்தர்ப்பங்களில் மாற்று வழிகளை நாட வேண்டியிருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மக்களின் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை அவர்கள் நாட வேண்டியிருக்கும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

வீட்டிற்கு அருகிலுள்ள கடையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பு சிலரால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் பொதுமக்கள் இதுபோன்ற முறைகேடாக நடந்து கொள்வது இறுதி முடிவுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறினார்.

மக்களின் இத்தகைய தவறான நடத்தை காரணமாக கொரோனா பரவுவது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here