இலங்கை மக்களிடம் இராணுவ தளபதி விடுக்கும் கோரிக்கை

0

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் முடிந்தளவு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் மக்கள் வழங்கவேண்டும் என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கேட்டுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

கொவிட் -19 தொற்றுநோய் ஒக்டோபரில் கட்டுப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் நாடு ஒரு வளமான நாடாக மாற்றப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பொது மக்களை முழு ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here