மக்களிடம் அவசர கோரிக்கை விடுத்த யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி

0

யாழ்.மாவட்டத்தில் பயண கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும்போது வீடுகளில் இருந்து உங்களதும், உங்கள் சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், யாழ்.மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமையானது ஏனைய இடங்களோடு ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது யாழ்.மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த வருடம் கொரோனா 1வது அலையில் 17 தொற்றாளர்களும் இரண்டாவது அலையில் 890 தொற்றாளர்களும் தற்போதுள்ள மூன்றாவது அலையில் 1398 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட கொரோனா தடுப்பு செயலின் இணைப்பாளர் என்ற அடிப்படையிலும் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி என்ற அடிப்படையிலும் யாழில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு பட்ட செயற்பாட்டினை இராணுவத்தினரின் மூலம் முன்னெடுகின்றோம். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றதுஅத்தோடு அரசாங்கத்தினால் தற்பொழுது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக பயண கட்டுப்பாட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

யாழ்.மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின் இணைப்பாளர் என்ற ரீதியில் தொற்றினை தடுக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவுள்ளது.

யாழ்.மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருங்கள் அத்தோடு உங்களுக்கு ஏதாவது கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் அவ்வாறு செயற்படுவதன் மூலம் உங்களையும் உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here