மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் நயன்தாரா!?

0

நயன்தாரா தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

11 படங்களுக்கு பிறகு மகேஷ்பாபு மீண்டும் த்ரிவிக்ரம் சீனிவாஸ் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இது மகேஷ்பாபு நடிக்கும் 27 வது படமாக உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் இருவருக்கும் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிகின்றன. அதில் ஒரு கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளாராம். மேலும் பாலிவுட் நடிகை ஒருவர் மற்றொரு கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நயன்தாரா தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார். மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மலையாள சூப்பர் ஹிட் படமான ‘லூசிபர்’ சிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகிவருகிறது. இந்தப் படத்திலும் நயன்தாரா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மகேஷ் பாபு தற்போது பரசுராம் இயக்கத்தில் ‘சர்க்காரு வாரி பட்டா’ படத்தின் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here