இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எம்.பி.நாமல் ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் விதித்துள்ளது.
திங்கட்கிழமை காலி முகத்திடலில் அமைதியான போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ள நபர்களின் பட்டியல்:
மகிந்த ராஜபக்ச
நாமல் ராஜபக்ச
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
பவித்ரா வன்னியாராச்சி
சஞ்சீவ எதிரிமான்ன
காஞ்சன ஜெயரத்ன
ரோஹித அபேகுணவர்தன
சி.பி.ரத்நாயக்க
சம்பத் அத்துகோரள
ரேணுகா பெரேரா
சனத் நிஷாந்த
நிஷாந்த ஜெயசிங்க
அமித் அபேவிக்ரம
புஷ்பலால்
மகிந்த கஹந்தகம
திலித் பெர்னாண்டோ
தேசபந்து தென்னகோன்