மகிந்த ஆதரவாளர்களை நீருக்குள் தள்ளிய பொது மக்கள்

0

இலங்கையில் கொழும்பு – காலி முகத்திடலில் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் ஈடுப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை பொதுமக்கள் தாக்கியதோடு பெஹீர வாவிக்குள் தள்ளியுள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டு வருகின்றது.

அமைதி வழியான போராட்டம் இன்று குழுப்பப்பட்டது.

பிரமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்றும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என்றும் தெரிவித்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் சென்ற குழுவினர் போராட்டக் களத்தில் உள்ள கூடாரங்களை எரித்தும் அடித்து உடைத்தும் அராஜக செயலில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக போராட்டக் களம் யுத்தப் பூமியாக மாறியதை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மகிந்தவின் ஆதரவாளர்கள் என்று தெரிவித்து வந்தவர்களை வாவிக்குள் பொதுமக்கள் தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகிந்த ஆதரவாளர்களை தாக்கி நீருக்குள் தள்ளிய பொது மக்கள்(photo) - தமிழ்வின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here