யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, இன்று மட்டுவில் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மட்டுவில் வண்ணாத்திப்பாலம் பொருளாதார மத்திய நிலையம் முன்பாக தற்போது போராட்ட பேரணியை ஆரம்பித்துள்ளனர்.
இதனை அறிந்த பொலிஸார் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு செல்லக் கூடிய பிரதான வீதிகளான மட்டுவில் மற்றும் புத்தூர் சந்தியில் பாதுகாப்பை அதிகரித்து, போராட்டத்துக்கு சென்ற பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
அத்துடன், போராட்டத்துக்கு சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்ட குழுவினரை புத்தூர் சந்திக்கு அண்மையில் மறித்து ,அவர்கள் பயணித்த பேருந்தின் கண்ணாடிகளை மூடி பேருந்துக்குள் சிறை பிடித்துள்ளனர்.
மேலும் மட்டுவில் பன்றிதலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் போராடத்துக்கு வருகை தந்திருந்த தாய்மாரை பேருந்துடன் நடுவீதியில் மறித்து வைத்துள்ளனர்.