மஹியங்கனை பாலத்தில் இருந்து நேற்யை தினம் இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த இளைஞன் கரைக்கு நீந்திச் சென்று தம்மைக் காப்பாற்றிக் கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மஹியங்கனை பொலிஸார் காணாமல் போன பெண்ணை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன பெண் றிதிமாலியத்தை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து தனியார் வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.