மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது ஏன்…?

0

பித்ரு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களது ஆசியை பெறலாம்.

மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பா ராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் அவர்கள் பிறந்து வளர்ந்த வீடுதானே. எனவேதான் மஹாளய பட்சமான பதினைந்து நாட்களும் நமது முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வந்து நம்முடன் தங்கியிருப்பார்கள்.

நமது வீட்டிற்கு வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும். இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களு க்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

மகாளய பட்சமான பிரதமைத் தொடங்கி 15 நாட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை தினத்தில் ஒருமுறையும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, வியாதிபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் விஷேசமாகத் தர்ப்பணம் செய்யலாம்.

மகாளய பட்ச காலம் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம்.

ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். நம்முடன் வாழ்ந்து மறைந்த அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும்.

புனித நீர் நிலைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். கூடவே தானமும் செய்ய வேண்டும். அப்படி செய்வதால் முன்னோர்கள் மகிழ்ச்சியடை ந்து நம்மை அசீர்வாதம் செய்வார்கள். அதன் மூலம் பித்ரு சாபம், பங்களிகளின் சாபம், முன்னோர்கள் சாபம் ஆகியவை விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here