மகான் திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஸ்மார்ட் லுக்! – வைரலாகும் போஸ்டர்!

0

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நடிப்பில், விக்ரம் மற்றும் அவருடைய மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்த திரைப்படம் ’மகான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் துருவ் விக்ரம் கேரக்டர் குறித்த போஸ்டர் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் சற்று முன்னர் துருவ் விக்ரம் கேரக்டர் குறித்த போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் தாதா என்ற கேரக்டரில் துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துருவ் விக்ரம் குறித்த அட்டகாசமான போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here