மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த பெற்றோரின் கொடூரம்..!

0

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி கொலை செய்த வழக்கில் மன நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த பெற்றோர், நடந்த சம்பவத்தில் குற்ற உணர்வு கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா ஆகியோர் ஜனவரி 24ம் திகதி தங்களது பிள்ளைகளான அலேக்கியா(27) மற்றும் சாய் திவ்யா(22) ஆகிய இருவரையும் விசித்திர காரணங்களுக்காக படுகொலை செய்தனர்.

இந்த வழக்கில் கைதான இருவரும் ஜனவரி 26 முதல் தனித்தனியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பத்மஜா உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிந்த சிறை அதிகாரிகள்,

குறித்த தம்பதியை சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் சுமார் 56 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பின்னர், இருவரும் சாதாரண நிலைக்கு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, நடந்த படுகொலையில் தங்களுக்கு வருத்தம் இருப்பதாகவும், குற்ற உணர்வு கொண்டுள்ளதாகவும் அந்த தம்பதி மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர்களை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here