மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு வழங்கப்பட்ட தண்டணை

0

இந்தியாவில் புதுக்கோட்டை அருகே தென்திரையான்பட்டியைச் சேர்ந்த முருகேசன் 2019ஆம் ஆண்டு தனது மனைவியைக் கொன்றுவிட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைது செய்யப்பட்ட முருகேசன் மீதான வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி கொடூர தந்தை முருகேசனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு ஆயுள் தண்டனை, 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு தரவும் மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here