மகளிர் தினத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ள படத்தின் போஸ்டர்!

0

நாயே பேயே படத்தின் சர்ச்சைக்குரிய போஸ்டர் இணையத்தில் வெளியாகி கண்டனங்களை சந்தித்துள்ளது.நடன இயக்குனராக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமானவர் தினேஷ். இவர் ஆடுகளம் படத்துக்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்த ஒரு குப்பைக் கதை திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது நாயே பேயே என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த படக்குழுவினர் ஒரு சர்ச்சையான போஸ்டரை ஒட்டியுள்ளனர். அந்த போஸடரில் ‘மொத மொதல்ல பேய கல்யாணம் பண்ணப் போறது நான்தானா? 90 சதவீதம் பொண்டாட்டிகள் பேய்தான’ என பெண்களை இழிவுப் படுத்தும் விதமாக சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. கீழ்த்தரமாக விளம்பரம் தேடும் விதமாக இதுபோன்ற போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here