மகனைக் கடத்திச் சென்ற தந்தை பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!

0

ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 7 வயது சிறுவனை கடத்திச்சென்ற தந்தை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை உட்பட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சிறுவனின் தந்தையான ஹொரண நீலகவினால் சிறுவன் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கூரிய ஆயுதத்தால் தனது மனைவியின் கைகால்களை துண்டுத் துண்டாக வெட்டி பலத்த காயம் ஏற்படுத்தியிருந்தார் என்றும் இச்சம்பவத்தின் பின்னர் அவரது குழந்தை மாமியாரின் பாதுகாப்பில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here