மகனின் பிரிவு தாங்க முடியாத பெற்றோர் எடுத்த விபரீத முடிவு

0

இந்தியாவில் தமிழகத்தில் கோயம்புத்தூரின் கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்.

இவரது மனைவி சரண்யா, இவர்களுக்கு 15 வயதில் ஷ்யாம் என்ற மகன் உள்ளான்.

கடந்த டிசம்பர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ஷ்யாம், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் அழுது புலம்பியுள்ளனர் சத்யராஜ் மற்றும் சரண்யா தம்பதியினர்.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

பொலிஸார் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்ற போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களது உடலை மீட்ட பொலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here