
மேற்குலகின் சுயநல நடவடிக்கைகளை எதிர்கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு, ப்ரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கோரியுள்ளார்.
பிரேஸில், இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா முதலான நாடுகளின் கூட்டணியான ப்ரிக்ஸ் மாநாட்டில் காணொளி மூலம் உரையாற்றியபோது புட்டின் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நேர்மையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் அடிப்படையில் சில நாடுகளின் சுயநல நடவடிக்கைகளால் உலகப் பொருளாதாரத்தில் வளர்ந்த இந்த நெருக்கடி சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளைத் தேட முடியும்.
நிதி வழிமுறைகளைப் பயன்படுத்தி, பொருளாதாரக் கொள்கையில் தங்கள் சொந்த தவறுகளை உலகம் முழுவதும் அவை மாற்றுகின்றன.
சுதந்திரமான கொள்கையைத் தொடர முயற்சிக்கும் பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆதரவு குறித்து ப்ரிக்ஸ் நாடுகள் அவதானம் செலுத்தலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்