போலி பொலிஸ் அதிகாரிகளின் அட்டகாசம்….. பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் போன்று பாசாங்கு செய்து கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு உரிய அடையாள அட்டையைக் காண்பித்து, பொதுமக்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை அவர்கள் கொள்ளையிட்டு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், வத்தளை காவல்துறையினரால் நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் குருணாகல் மற்றும் வத்தளை – சேதுவத்தை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here