போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்….ஜேர்மனியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ஜேர்மனியின் Baden-Württembergஇல் உள்ள தம்பதியின் வீட்டில், ஏராளம் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அந்த சான்றிதழை வைத்திருப்பவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதாக அச்சிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 31 வயது நபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது மனைவியாகிய 34 வயது பெண் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு தம்பதியர் போலி கொரோனா சான்றிதழ்களை விற்று வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அவர்களது வீட்டை பொலிசார் சோதனையிட்டனர்.

ஜேர்மனி கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு சலுகைகள் அளித்துள்ள நிலையில், அதைப் பயன்படுத்திக்கொண்டு இந்த தம்பதியர் காசு பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here