கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் அனைவரும் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் போலந்தில் தடுப்பூசி செலுத்தியுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படுவதாக, வார்சா நகர உணவங்கள் தெரிவித்துள்ளன.
இதன்மூலம் தங்களது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும்
வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார்.
போலந்தில் சுமார் 56 சதவீதம் பேர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.