போர் நிறுத்தம் தொடர்பான வாக்குறுதியை மீறிய ரஷ்யா

0

ரஷ்ய – உக்ரைன் போர் இரு மாதங்களுக்கு மேலாக தீவிரமடைந்து வருகின்றது.

போர் நிறுத்தம் தொடர்பான வாக்குறுதியை ரஷ்யா மீண்டும் மீறிச் செயற்படுவதாக உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுமக்களை வெளியேற்றும் முயற்சிகளை ரஷ்ய படையினர் முறியடிப்பதாக யுக்ரைன் படையின் உப கட்டளை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எறிகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக, தொழிற்சாலையின் கீழ் பகுதியில், தஞ்சமடைந்த மக்களை அங்கிருந்து வெளியேற்ற ரஷ்ய படைகள் அனுமதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா நெறிமுறைகளையும், சட்டங்களையும் கடைப்பிடிப்பதில்லை என்றும் யுக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது.

எவ்வாறிருப்பினும், முன்னதாக ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டிருந்த ரஷ்ய க்ரெம்ளின் மாளிகை பேச்சாளர் ஒருவர், பொதுமக்கள் வெளியேறுவதற்கான பாதை தொடர்ந்தும் இயக்க நிலையில் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here