உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக படையெடுத்து வருகின்து.
உக்ரைனிய சிறுவர்கள் இந்த போரால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தப்பித்த உக்ரைனியர்கள் ஒடிசா நகரில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
அங்குள்ள விடுதியில் இலவசமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கெர்சன் நகரவாசிகளுக்காக விடுதி நிர்வாகம் சார்பில் டால்பின்களின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இது தற்காலிகமாக அவர்களின் கவலைகளை மறக்கச் செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.