போரை நிறுத்த ஆர்வம் காட்டும் ரஷ்யா… வெளியாகிய முக்கிய தகவல்

0

ரஷ்யா- உக்ரைன் போர் 100 நாள்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் , உக்ரைனில் கிழக்கு பகுதியான டான்பாஸை முழுமையாக கைப்பற்றடிவேண்டும் என ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கூடிய விரைவில் அரசியல் மற்றும் இராஜதந்திர ஒப்பந்தங்களை உக்ரைனுடன் மேற்கொள்ள ரஷ்யா விரும்புவதாக ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷெவ் (Nikolai Patrushev) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பேச்சுவார்த்தையானது இருநாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்த அனுமதிக்கும் என தெரியவந்துள்ளது.

டான்பாஸை முழுவதுமாக கைப்பற்றும் ரஷ்ய வீரர்களின் தற்போதைய முயற்சிகளில் மூலோபாய நகரான சிவெரோடோனெட்ஸ்கை தாக்குதலுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், சிவெரோடோனெட்ஸ்க் நகரை பிற உக்ரைனிய நகரங்களுடன் இணைக்கும் மூன்று தரைப்பாலங்களையும் ரஷ்யப் படைகள் முழுவதுமாக தகர்த்துள்ளனர்.

அத்துடன் , பொதுமக்களையும், ராணுவ வீரர்களையும் உடனடியாக சரணடையுமாறு ரஷ்ய துருப்புக்கள் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here