பொலிஸ் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த பிரதான சந்தேகநபர்

0

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹேவா லுனுவிலகே லசந்த, பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை − தியகம பகுதியில் இன்று”(26) அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபருக்கு சொந்தமான மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை காண்பிக்க அழைத்து சென்ற வேளையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது சந்தேகநபர் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்.

இதையடுத்து, பொலிஸாரின் பதில் தாக்குதல் நடத்தியதிலேயே, சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் 2 பொலிஸார் உத்தியோகத்தர்கள் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியான நபர் ஷன்சைன் சுத்தாவின் கொலை உள்ளிட்ட மேலும் பல படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here