பொலிஸ் காவலில் இருந்த பெண் மரணம்

0

பேலியகொட பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாயான 43 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்த போதிலும் பொலிஸார் அதனை அலட்சியம் செய்த காரணத்தால் குறித்த பெண் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரு குழுக்களுக்கிடையேயான தகராறு தொடர்பாக ஒரு தரப்பினர் அளித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து மற்ற தரப்பினர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக தற்போது உயிரிழந்த பெண் உட்பட ஐந்து பேரை பொலிசார் கைது செய்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பெண் தனது உடல்நிலை குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்த போதிலும்இ அவருக்கு சிகிச்சையளிக்கவோ அல்லது மருத்துவமனையில் சேர்க்கவோ அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உறவினர்கள குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்து விட்டதாக தெரிவக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here