இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது யாழ் விஜயத்தின் போது மட்டுவில் பகுதியில் அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிசார் நடத்திய தாக்குதலுக்கு எதிராக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பாரிய போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் கலந்துரையாடல் யாழ் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
மட்டுவில் பகுதியில் பொருளாதார மத்திய நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வருகைக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பொலிஸாரால் தாக்கப்பட்டமை மற்றும் அநாகரிகமாக நடாத்தப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரியளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை குறித்த போராட்டத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டு வருகிறது.
குறித்த கலந்துறையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு மாகாணத்தின் செயலாளர் ஆ.லீலாவதி தலைமையில் இடம்பெற்று வருகிறது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மு.பா.உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், வேலன் சுவாமி, யாழ் மாவட்ட மீனவ சம்மேளத்தின் பிரதிநிதிகள், வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ், அணை.மயூரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கட்சி அரசியலுக்கு அப்பால் அனைவரையும் இப்போராட்டத்தில் ஒன்று திரளுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.