சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் Oberaargau பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் தமது சொந்த பிள்ளைகளுக்கும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் சுகாதார நிபுணர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தமது செயலை குறித்த தாயார் நியாயப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒவ்வாமை பாதிப்பு இருப்பதாக கூறி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துள்ளார்.
குறித்த தாயார், அவர் குடியிருக்கும் பகுதியில் கொரோனா பரவல் அடையாளம் காணப்பட்ட நிலையில், அதையே வாய்ப்பாக பயன்படுத்தியுள்ளார்.
முதலில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்னர், தமது பிள்ளைகளுக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் தடுப்பூசிக்கு பயந்து கொரோனா பாதிப்பை ஏற்படுத்திக் கொண்ட செயல் கடும் விமர்சனத்தை வரவழைத்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கை மருத்துவ ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொறுப்பற்ற செயல் என நிபுணர்கள் தரப்பு விமர்சித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு ஒவ்வொருவருக்கும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்க முடியாத சூழலில், உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பூசியால் ஒவ்வாமை ஏற்படும் என்பது அரிதான விடயமாக கருதப்படுகின்றது.