பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி இதுவா? பரபரப்பு தகவல்!

0

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு உள்ளது என்பதும் அதில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ஏப்ரல் இருபத்தி எட்டாம் தேதி இந்த படம் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் வரும் பொங்கல் தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், நிழல்கள் ரவி, சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here