பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஸ்பைடர் மேன்… வைரலாகும் புகைப்படங்கள்

0

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் இருப்பது போன்ற புகைப்படங்களை நடிகை சுஹாசினி வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதைதான் இப்படமாக உருவாக்கி வருகிறார் மணிரத்னம். இருபாகங்களாக உருவாகும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்தியாவே எதிர்பார்க்கும் இப்படம் சுமார் 500கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நட்சத்திரங்கள் களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் 70 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஆனால் கொரானா ஊரடங்கால் படத்தின் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் துவங்கியது. இதில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக, ‘அவர்கள் ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேன் அல்ல. கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள் என்றும் நீல நிறத்தில் உடையணிந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here