பொத்துவில் – பொலிகண்டி பேரணி: ஸ்ரீதரனிடம் மற்றுமொரு வாக்குமூலம் பதிவு!

0

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் மன்னார் பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை சென்றிருந்த மன்னார் பொலிஸார், வாக்குமூலத்தை பதிவுசெய்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மூன்றாம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த பெப்ரவரி ஏழாம் திகதி பொலிகண்டியில் நிறைவுபெற்றது.

இந்நிலையில், மன்னார் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாகவே ஸ்ரீதரனிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

இதேவேளை, இந்தப் பேரணி குறித்து ஏற்கனவே ஸ்ரீதரனிடம் கிளிநொச்சி மாவட்டப் பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தனர். அத்துடன், பேரணியில் கலந்துகொண்டிருந்த அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தினர் உட்பட பலரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here