ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் ‘கொடூரமான படையெடுப்பினால் உக்ரைனில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றது.
உக்ரைனில் 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்குவதாக ரஷ்யா தெரிவித்த நிலையில் பொதுமக்களின் தளங்களும் தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி Zelensky கூறியுள்ளார்.
“ரஷ்யர்கள் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் மற்றும் அமைதியான நகரங்களையும் இராணுவ இலக்குகளாக மாற்றுகிறார்கள்.
இது தவறானது மற்றும் ஒருபோதும் மன்னிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் ஆரம்பித்த பின் இதுவரை குறைந்தது 137 பேர் – வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்துள்ளனர்.
மேலும் 316 பேர் காயமடைந்துள்ளனர்.
கார்கிவ் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷ்ய படை ஷெல் தாக்குதல் நடத்தியதில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.