பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமா?

0

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த நடைமுறை சாத்தியப்படலாம் ஆனால் தற்போது இந்த விடயம் சாத்தியமான விடயமல்ல என்றும் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

பரபரப்பாக இயங்கும் குறித்த சேவையின்போது அனைவரிடமும் தடுப்பூசிக்கான சான்றிதழை பரிசோதனை செய்வது எனபது இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here