பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு உயர் பதவியை வழங்கினார் ஜனாதிபதி

0

மரணத் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வா, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டள்ளது.

இவ்விடயம் தொடர்பான கடிதம், ஜனாதிபதியின் செயலாளரினால் துமிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு சமூக அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here