உக்ரைன் கெர்சன் நகரை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் போராட்டத்தை மேற்கொண்டனர்.
அவர்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
சிசிடிவி கமெராக்களில் இச்சம்பவம் பதிவாகிய நிலையில் தற்போது வெளியாகியுள்ளன.
கெர்சன் நகர சாலையில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்படி சாலையில் திரண்ட மக்கள் மீது ரஷ்ய வீரர்கள் துப்பாக்கியில் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர்.
ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் நிலை குழைந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.