பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கனடா பொலிஸ்

0

காணாமல் போன எவரையும் அணுக வேண்டாம் என கனடா பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கோக்விட்லாம் பகுதியைச் சேர்ந்த ஸ்பென்சர் ஸ்மித் 42 வயதான நபர் புதன்கிழமை மாயமாகியுள்ளார்.

பிரித்தானிய கொலம்பியாவின் மனநல சட்ட வாரண்டின் அடிப்படையில் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

ஸ்மித் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டிருக்கலாம்.

எனவே அவரைக் கண்டால் நெருங்க வேண்டாம்.

அதற்குப் பதிலாக உடனடியாக 911 என்ற எண்ணுக்கு அழைக்கவும் என்று காவல்துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.

ஸ்மித் 6 அடி 1 அங்குலம் உயரமும் 200 பவுண்டுகள் எடையும் கொண்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் அடிக்கடி ரிச்மண்ட் பகுதிக்கு சென்று வருவதாக தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here